ஜெர்சி ரகசியத்தை வெளியிட்டார் “குட்டி ஹீரோ” சர்பிராஸ் கான்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான சர்பிராஸ் கான் தனது ஜெர்சி நம்பருக்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார்.

மும்பையை சேர்ந்த 18 வயதேயான சர்பிராஸ் கான் இந்த இளம் வயதிலே துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடும் சர்பிராஸ் கானின் அதிரடியை பார்த்து அணித்தலைவர் விராட் கோஹ்லியே வியந்து போனார்.

இந்த ஆண்டு நடந்த வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரிலும் சர்பிராஸ் கான் அதிரடியில் அசத்தினார்.

முன்னதாக சர்பிராஸ் கான் 87 என்ற நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார். ஆனால் 2014ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அவர் தனது ஜெர்சி நம்பரை 97 என மாற்றிவிட்டார்.

இது குறித்து சர்பிராஸ் கானிடம் கேட்ட போது, தனது தந்தைக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் 97 என மாற்றிக் கொண்டதாகவும், இந்த நம்பரை மற்றவர்கள் சொல்லும் போது அவரது தந்தையின் பெயரான ’நாஸ்ஹாட்’ என கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்பிராஸ் கானுக்கு முதல் பயிற்சியாளர் அவர் தந்தை தான். சர்பிராஸ் கானின் இந்த வளர்ச்சிக்கு அவரது தந்தையும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments