காலை உடைத்துக் கொண்ட மிட்செல் ஸ்டார்க்கிற்கு 30 தையல்கள்!

Report Print Abhimanyu in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட விபத்தில் 30 தையல் போடப்பட்டுள்ளது.

பிரபல வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நீண்ட இடைவேளைக்கு பின் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் (52 போட்டிகள்) கைப்பற்றி புதிய உலக சாதனையும் படைத்தார்.

இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், பயிற்சிக்கான மெஷினில் மோதினார். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், மிட்செல் ஸ்டார்கிற்கு காலில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரின் எலும்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இதற்காக 30 தையல்கள் போடப்பட்டுள்ளது. காயங்கள் குணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களாகும், அதன் பின் தையல்கள் எடுக்கப்படும். அதுவரை அவர் மருத்துவமனையில் தான் இருப்பார் என கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments