சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்தை கைப்பற்றியது கூகர்ஸ் துடுப்பாட்ட அணி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்தை கைப்பற்றியதுடன், முதலாமிட அணி என்ற பெருமையையும் தமதாக்கிக்கொண்டது கூகர்ஸ் துடுப்பாட்ட அணி.

சீனன் அவர்களின் நினைவாக இரண்டாவது ஆண்டாக கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(September 11th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடாத்தப்பட்ட சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(2nd Seenan Memorial Challenge Trophy)தொடரை MTCL அமைப்பினரும், சீனன் அவர்களின் குடும்பத்தினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர்.

இந்த வாரத்தின் பிரதான(Premium Game)போட்டிக்கு Himalaya Banquet & Himalaya Banquet Services நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர்.

இந்த வாரத்தின் பிரதான(Premium Game)போட்டியாக Toronto Blues துடுப்பாட்ட அணியும், Youngstars துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன்

பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Toronto Blues CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Youngstars CC அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Youngstars CC அணியை சேர்ந்த ரகு ஞானசௌந்தரநாயகம் (Ragu Gnanasountharanayakam) 22 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் Toronto Blues CC அணியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா நித்தியநாதன்(Jeyakrishna Nithiyanathan) 3 ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues CC அணி 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை பெற்று 31 ஓட்டங்களினால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues CC அணியை சேர்ந்த கமல்ராஜ் ராதாகிருஷ்ணன்(Kamalraj Rathakrishnan) மற்றும் சதீஷ் நடராஜா(Satheesh Nadarajah) ஆகிய இருவரும் தலா 13 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் Youngstars CC அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 16 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் தனது பங்களிப்பை செய்த Youngstars CC அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) தெரிவுசெய்யப்பட்டார்.

இரண்டாவது சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(2nd Seenan Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு B-Town Boyz CC, Cougars CC, Atlas A CC மற்றும் Blue Birds CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் B-Town Boyz CC அணிக்கும் Atlas A CC அணிக்கும் இடையிலான போட்டியில் B-Town Boyz CC அணியும், Blue Birds CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

Cougars CC அணியானது கடந்த இரண்டு வருடங்களாக MTCL அமைப்பின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக வலம்வருவதோடு, கடந்த வாரம் சூப்பர் லீக் வெற்றிக்கேடயத்தை கைப்பற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், B-Town Boyz CC அணியினர் இவ்வருடத்தில் விளையாடும் இரண்டாவது சுற்றுக்கிண்ண இறுதிப்போட்டியாகும்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற B-Town Boyz CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 12 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம் (Paranthaman selvaratnam) 10 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 96 ஓட்டங்களை விளாசி இவ்வருட பருவக்காலத்தின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.

பந்து வீச்சில் B-Town Boyz CC அணியை சேர்ந்த ஜெகதீபன் ஜெயரட்ணம்(Jeyatheepan Jeyaratnam) 3 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கெட்டினை கைப்பெற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய B-Town Boyz CC அணி 10.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று 30 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினார்கள்.

துடுப்பாட்டத்தில் B-Town Boyz CC அணியை சேர்ந்த ஜூட் மாசிலாமணி(Jude Masilamani) 31 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா (kapilash Alakaiah) சிறந்த முறையில் பந்து வீசி 2.5 ஓவர்களில் 33 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) தெரிவுசெய்யப்பட்டார்.

வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Cougars CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த B-Town Boyz CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Cougars CC அணியை சேர்ந்த விமல் மாசிலாமணி(Vimal Masilamani) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Blue Birds CC அணியை சேர்ந்த குகதீபன் சதானந்தனேசன்(Kugatheepan Sathananthanesan) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக B-Town Boyz CC அணியை சேர்ந்த ஜெகதீபன் ஜெயரட்ணம்(Jeyatheepan Jeyaratnam) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் தொடரின் மிகவும் முக்கியமான விளையாட்டு வீரராக(MVP) இறுதிப்போட்டியில் 96 ஓட்டங்களை விளாசியதோடு அணியின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள் (Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம் (BEST BATTING)
 • பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) of Cougars CC - 96 ஓட்டங்கள் VS Sauga Boyz CC
 • அன்றிவ் ஜோர்ஜ்(Andrew George) of B-Town Boyz CC - 44(N.O) ஓட்டங்கள் VS Cheetahs CC
 • வினோத் சண்முகலிங்கம்(Vinoth Shanmugalingam) of Blue Birds CC - 40 ஓட்டங்கள் VS Inuvil Boys Toronto CC
 • ஜதுர்ஷன் நாதன்(Jathursan Nathan) of Cheetahs CC - 39(N.O) ஓட்டங்கள் VS B-Town Boyz CC
 • விமல் மாசிலாமணி(Vimal Masilamani) of Cougars CC - 38 ஓட்டங்கள் VS Blue Birds CC
சிறந்த பந்துவீச்சு (BEST BOWLING)
 • குகதீபன் சதானந்தனேசன்(Kugatheepan Sathananthanesan) of Blue Birds CC - 5 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boys Toronto CC(3-0-07-5)
 • ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC - 4 ஆட்டமிழப்புக்கள் VS B-Town Boyz CC(3-0-08-4)
 • ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன்(Sridharshan Srikanthan) of Cougars CC - 4 ஆட்டமிழப்புக்கள் VS Blue Birds CC(3-0-10-4)
சிறந்த பிடியெடுப்புக்கள் (BEST CATCHES)
 • அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) of Youngstars CC VS Toronto Blues CC
 • அசாம் மொஹமட்(Azzam Mohamed) of Atlas-A CC VS B-Town Boyz CC
 • ஹரிகரன் செல்வரத்தினம்(Harikaran Selvaratnam) of Cougars CC VS B-Town Boyz CC
 • அரிஹரசுதான் கணேசமூர்த்தி(Ariharasuthan Ganesamoorthy) of Inuvil Boys Toronto CC VS Blue Birds CC
 • சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) of GPS CC VS B-Town Boyz CC
 • ரமேஷ் கதிர்(Ramesh Kathir) of BNS CC VS GPS CC

மேலதிக தொடர்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments