செல்லக்குழந்தைகளுடன் கிரிக்கெட் அப்பாக்கள்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
463Shares

கிரிக்கெட் துறையில் இருக்கும் வீரர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளார்களோ, அதே போன்று அவர்களது குழந்தைகளும் பிரபலமாக இருப்பார்கள்.

வீரர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் செல்லக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதும், அந்த சந்தோஷ தருணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரிசிகர்களோடு அதனை பகிர்ந்துகொள்வார்கள்.

இதோ கிரிக்கெட் துறை வீரர்கள் தங்கள் செல்லக்குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள்,

முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு சமீபத்தில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது, நீச்சல் குளத்தில் தனது குழந்தை ஆயிரா ஷமியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது, அக்குழந்தையின் பெயர் ப்ஷஸ். அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தினை தனது மனைவிக்காக பதிவேற்றம் செய்துள்ளார்.

ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது மகன் Zoravar செய்யும் குறும்புகளை எப்போது தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருவார்.

சுட்டிக்குழந்தையான Zoravar - ஐ அவர் எப்போதும் மிஸ் பண்ண மாட்டார், இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு Aazeen என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது, தனது மகள் தனக்கு அதிர்ஷ்டமானவள் என கூறும் கம்பீர், தந்தை என்ற உறவு தனக்கு அதிக சந்தோஷத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு இரண்டு பெண் குழந்தைகள், இவர் அதிகமாக தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார், அந்த சந்தோஷத்தை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவரின் மூத்த மகள் Ivy Mae 2014 ஆம் ஆண்டும், இரண்டாவது மகள் Indi Rae 2016 ஆம் ஆண்டு பிறந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments