திண்டுக்கல் அணி “அவுட்”: அதிரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தூத்துக்குடி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய திண்டுக்கல் அணி அபிநவ் முகுந்த் (91), தினேஷ் கார்த்திக் (48) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

இதன் பின்னர் 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.

அந்த அணிக்கு ஜெகதீசன், ரகுநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் (59) அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின் வந்த வெங்கடராமன் அதிரடியாக 26 பந்தில் 40 ஓட்டங்கள் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்களால் 188 ஓட்டங்களை எட்ட முடியவில்லை.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களே சேர்க்க முடிந்தது. இதனால் தூத்துக்குடி அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இன்று நடக்கவிருக்கும் 2வது அரையிறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments