அட.. அப்படியே மிரட்டிவிட்டார்! சனத் ஜெயசூரியாவை வியக்க வைத்த கோஹ்லி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

விளையாட்டை எப்போதும் அரசியலுடன் தொடர்புப்படுத்தகூடாது என்று முன்னாள் இலங்கை வீரரும், தெரிவுக் குழுத் தலைவருமான சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சனத் ஜெயசூரியா பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி நான் பேசக் கூடாது.

ஆனால் கண்டிப்பாக அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், விராட் கோஹ்லி அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதேபோல் ஒரு தனிப்பட்ட வீரராகவும் அசத்தி வருகிறார்.

இலங்கை தொடரின் போது அவரது ஆட்டத்தை நான் பார்த்தேன். எப்போதும் பெரிய ஓட்டங்களை எடுக்கவே அவர் முயற்சி செய்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.

ஆனால் 3வது போட்டியில் மொத்தமாக இரட்டை சதம் அடித்து மிரட்டிவிட்டார் என்று பாராட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments