இலங்கை அணி வீரரை ரோல் மாடலாக வைத்துள்ள இந்திய வீரர்? யார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் அவுஸ்திரேலியா அணியை தன்னுடைய சுழற் பந்து வீச்சால் கதி கலங்க வைத்தார் இலங்கை வீரர் ஹெராத்.

இவருடைய சுழற்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அவுஸ்திரேலியா வீரர்கள் தடுமாறினர். இவரின் சிறப்பான செயல்பாடு மூலம் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இவரின் பந்து வீச்சைக் கண்டு இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் வெகுவாக பாராட்டினார். தற்போது அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவரான இயான் செப்பல் இலங்கை வீரர் ஹெராத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹெராத் சிறப்பாக செயல்பட்டார் எனவும், அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா வீரர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ரங்கனா ஹெராத்தினால் வேதனை ஏற்படுத்தப்பட்ட அவுஸ்திரேலியா அணி இன்னும் சில தினங்களில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

ஹெராத்தின் வெற்றியைக் கண்ட ரவீந்திர ஜடேஜா தம்மாலும் அவுஸ்திரேலியா அணியை தம்முடைய பந்து வீச்சால் மிரட்டிவிடலாம் என்று கனவில் மிதந்து கொண்டிருப்பார் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு காரணம் இருவரும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதால் இயான் செப்பால் இப்படி கூறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments