விக்கெட் கீப்பர்: டோனிக்கு மாற்றாக கோஹ்லி!

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனிக்கு மாற்றாக துணைத் தலைவர் கோஹ்லி களமிறங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

2015ம் ஆண்டு டாக்காவில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணித்தலைவர் டோனி வயிற்று பிரச்சனையால் அவதிப்பட்டார்.

இதனால், அவர் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. எனினும், டோனி நம்பிக்கையுடன் களமிறங்கி விளையாடினார்.

போட்டியின் 43வது ஓவரின் போது டோனி வயிற்று பிரச்சனை காரணமாக உடை மாற்றும் அறைக்கு விரைந்தார்.

அப்போது, துணைத் தலைவர் கோஹ்லி டோனியின் கையுறையை அணிந்து உமேஷ் யாதவ் வீசிய ஓவருக்கு கீப்பராக திகழ்ந்தார், குறித்த ஓவரில் ஒரு விக்கெட் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, அடுத்த ஓவரே டோனி களமிறங்கி தனது அணியை தொடர்ந்து வழிநடத்தினார்.

கோஹ்லி ஒரு ஓவர் மட்டும் டோனிக்கு மாற்றாக கீப்பராக களமிறங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments