களமிறங்கும் போதே புதிய மைல்கல்: சச்சினை ஓரங்கட்டிய கோஹ்லி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்கும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு இது 50வது டெஸ்ட் போட்டியாக அமையப் போகிறது.

இதுவரை 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,570 ஓட்டங்கள் (26 சதம், 38 அரைசதம்) எடுத்துள்ள கோஹ்லி, சச்சின் டெண்டுல்கரை விட ஒரு படி மேலே தான் இருக்கிறார்.

அதேபோல் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 12 அரைசதம், 13 சதம் என மொத்தம் 3,643 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை விசாகப்பட்டினத்தில் தன்னுடைய 50 டெஸ்டில் கோஹ்லி களமிறங்கவுள்ளார். இந்த விடயத்திலும் கோஹ்லி சச்சினை முந்தியுள்ளார்.

இந்திய அணியின் முதுகெலும்பாக விளங்கிய சச்சின் முதல் 50 டெஸ்ட்டில் 32 போட்டியை அன்னி்ய மண்ணில் ஆடினார். இதில் 11 சதங்கள் அடித்த அவரது சராசரி 50.00 ஆக இருந்தது.

ஆனால் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி தலைவராக களமிறங்கிய பிறகு டெஸ்ட் அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 50வது டெஸ்டில் களமிறங்கப் போகும் கோஹ்லி எந்தவித சந்தேகமும் இன்றி தனது குரு சச்சினையே பின்னுக்கு தள்ளியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments