விஸ்வரூபம் எடுக்கும் கோஹ்லி! இமாலய இலக்கை நோக்கி இந்தியா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் விராட் கோஹ்லி (167), புஜாரா (119) ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 255 ஓட்டங்களுக்கு ஆல்- அவுட் ஆனது.

பின்னர் 200 ஓட்டங்கள் முன்னிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலே திணறியது.

முரளிவிஜய் (3), லோகேஷ் ராகுல் (10), புஜாரா (1) ஆகியோர் வரிசையாக சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 40 ஓட்டங்களுக்கே இந்தியா 3 விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

பின்னர் வந்த அணித்தலைவர் கோஹ்லி, ரஹானே ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர்.

முதல் இன்னிங்சில் 167 ஓட்டங்களை சேர்த்த கோஹ்லி, இந்த இன்னிங்சில் அரைசதம் விளாசினார்.

இன்றைய 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்து 298 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

அணித்தலைவர் கோஹ்லி 56 ஓட்டங்களுடனும், ரஹானே 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பில், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டும், ஆண்டர்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments