ஆசிய கிண்ணத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

Report Print Amirah in கிரிக்கெட்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் தொடரின் ஏ குழுவுக்கான போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மொரட்டுவையில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய 19வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் டானியல் 67 ஓட்டங்களையும், சதுரங்க 44 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்தியா சார்பில் யாஷ் தாகூர், சிவா சிங் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும், ஹேரம்ப் ப்பரப், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

208 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கிற்காக களம் இறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 208 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணியில் ஜில் (78 ஓட்டங்கள்), ப்ரித்வி ஷாவ் (36 ஓட்டங்கள்), ஷர்மா(33 ஓட்டங்கள்),பிரியம் கர்க்(33 ஓட்டங்கள்) ஆகியோர் சிறப்பாக ஆடியுள்ளனர்.

இலங்கை அணி சார்பில் ஜயவிக்ரம 2 விக்கட்டுகளையும், டானியல் மற்றும் பிரசன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments