தொடரை வென்ற இந்தியா: கோஹ்லிக்கு டோனி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதற்காக டோனி, தற்போதைய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஆட்டோகிராஃப் போட்ட பந்தை வெற்றியின் அடையாளமாக பரிசளித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.

ஒருநாள் தொடரில் முதன்முறையாக தலைவராக களமிறங்கிய விராட் கோஹ்லி இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இந்நிலையில் கட்டாக்கில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது முன்னாள் தலைவர் டோனி, வெற்றியின் நினைவாக பந்தில் ஆட்டோகிராஃப் போட்டு கோஹ்லிக்கு பரிசளித்தார்.

இது தொடர்பாக கோஹ்லி கூறுகையில், 2வது ஒருநாள் போட்டியின் போது டோனி எனக்கு அவரது ஆட்டோகிராஃப் போட்ட பந்தை பரிசளித்தார்.

அப்போது, ’நீ தலைவராக வென்ற முதல் ஒருநாள் தொடர் இது, எனவே இதை வெற்றியின் நினைவாக வைத்துக் கொள்’ என்று கூறினார். உண்மையில் அது ஒரு அற்புதமான தருணம் என்றார்.

மேலும், ஒளிரும் ஸ்டெம்பின் விலை அதிகமாக இருப்பதால் டோனி எனக்கு பந்தை பரிசளித்தார் என்று கிண்டலாக தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments