அஸ்வினின் ஆட்டம்: சாஹிப் அல் ஹசன் கருத்து

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்தியாவிற்கு எதிரான போட்டி குறித்து சகலதுறை ஆட்டக்காரர் சாஹிப் அல் ஹசன் கூறுகையில், இந்த போட்டி ஒவ்வொரு வீரர்களுக்கும் சவாலானது. ஒரு துறையை மட்டும் நம்பி ஒரு அணி வெற்றியை சார்ந்திருக்க முடியாது.

நியூசிலாந்து தொடரில் இது நடந்தது, ஒருநாள் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம், அடுத்த நாள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம்.

ஆனால், இரு துறைகளிலும் ஒரே நாளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. புதிய வீரர்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு வீரரரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அஸ்வினுக்கு உங்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அஸ்வின் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

அவருடைய கட்டுப்பாடு அவரை தனி வீரராக உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை அவர் செய்கிறார். அவருடைய கட்டுப்பாடு மற்றும் உறுதி அவரை நம்பர் ஒன் வீரராக உருவாக்கியுள்ளது.

அஸ்வின் உடன் எந்தவொரு போட்டியும் இல்லை, அவருடனான வழியில் நான் உள்ளேனா என்று என்னால் நினைக்க தோன்றவில்லை, அந்த வழியில் எந்தவொரு நினைப்பும் இல்லை.

அவருடைய இடத்தில் இருந்து அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், என்னுடைய வழியில் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments