இலங்கை தொடரிலிருந்து அதிரடி மன்னன் விலகல்: சமாளிக்குமா அவுஸ்திரேலியா

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அதிரடி மன்னன் விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட கேஎப்சி டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் அதிரடி மன்னனாக திகழும் கிறிஸ் லின் தொடலிருந்து விலகியுள்ளார். கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிறிஸ் லின்னுக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியில் பென் டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளுர் போட்டிகளில் களமிறங்கி பென் டங்க் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லிசித் மலிங்கா அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு இந்த தொடர் கடும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments