பெங்களூர் டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

Report Print Meenakshi in கிரிக்கெட்

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

கடந்த 4ம் திகதி தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து நேற்று முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலியா 276 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் 87 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக அபினவ் ,லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இதில் அபினவ் 16 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல் 51 வது ரன்னிலும், விராட் கோஹ்லி 15வது ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த புஜாராவும், ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

தற்போதைய நிலையில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோஷ் ஹாஸ்லிவுட் மூன்று விக்கெட்டும், ஸ்டீவ் ஓ கீப்பியும் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இன்றைய நாள் முடிவில் அவுஸ்திரேலியாவை விட, இந்திய அணி 6 விக்கெட் மீதமுள்ள நிலையில் 126 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments