அசங்க குருசிங்க ரிட்டர்ன்ஸ்: 2019 உலக கிண்ணம் இலங்கைக்கே

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள அசங்க குரு-சிங்க எழுச்சியூட்டும் பேட்டியளித்துள்ளார்.

1996 உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அசங்க குருசிங்க மீண்டும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றவுள்ளார்.

புதிய முகாமையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட அசங்க குரு-சிங்க கூறியதாவது,

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணிக்கு பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தமையையிட்டு பெருமையடைகிறேன்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பை ஏற்று மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.

குறிப்பாக முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியை சிறப் பான முறையில் கட்டியெழுப்பி 2019 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த அணியொன்றை உருவாக்குவதே எனது இலக்காகும் என குரு­சிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments