11 நாட்கள் தூக்கமில்லாமல் தவித்து வந்த இலங்கை அணித்தலைவர்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் தலைவரான ஆஞ்சிலோ மேத்யூசிக்கு கடந்த 11 தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இலங்கை அணியின் சிறந்த தலைவர்களில் மேத்யூசும் ஒருவர். இவர் கடந்த 11 தினங்களாக இரவில் சரியான துக்கமில்லாமல் தவித்து வந்ததாக திலங்கா சுமதி பாலா தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை கடந்த 11 தினங்களுக்கு முன்னர் பிறந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேத்யூஸ் கூறுகையில், குழந்தை நன்றாக உள்ளது என்றும், இன்னும் பெயர் வைப்பது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனவும் கூடிய விரைவில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அக்குழந்தையின் பெயர் ஜேக்யூஸ்சாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மேத்யூஸ் தென் ஆப்பிரிக்க வீரர் ஜேக்யூஸ்காலிசின் தீவிர ரசிகர் என்பதால், அந்த பெயர் வைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments