உடனடியாக போன் செய்யும் படி கூறிய தவான் மனைவி: யுவராஜ் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

முட்டாள் தினத்தன்று இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவானை முட்டாள் தினமான ஏப்ரல் 1 அன்று வேடிக்கையாக ஏமாற்றியுள்ளார்.

ஏப்ரல் 1-ஆம் திகதி முட்டாள் தினம் என்று அழைப்பதுண்டு. இந்த திகதியில் ஒருவர் நமக்கு பிடித்த நபரை ஏமாற்றுவது வழக்கம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை வேடிக்கையாக செய்வார்கள்.

அப்படி தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிராண்டன் மெக்கல்லம் இதுதான் தனக்கு கடைசி ஐ.பி.எல். தொடர் என்று வேடிக்கையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் தனது இன்ஸ்டிரா கிராமில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், யுவராஜ் சிங் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். தவான் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது யுவராஜ், தவானிடம் உங்கள் மனைவி போன் செய்தார்கள்.

அப்போது உங்களை பற்றி கேட்டார்கள். அவரை உடனடியாக போன் செய்ய சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் என்று கூறினார்.

உடனே, தவான் ஓடி வந்து தனது பையை திறந்து போனை எடுக்க முயற்சி செய்தார். அப்போது யுவராஜ் சிங் ஏப்ரல்-1 முட்டாள் தினத்தன்று உங்களை வேடிக்கைக்காக ஏமாற்றினேன் என்றார்.

உடனே இருவரும் சிரித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments