இலங்கை வீரர் இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பார்? தேவையில்லாமல் போன ஒரு விக்கெட்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் சண்டிமால், கவனக்குறைவாக ஓடியதால் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் 1-1 என்ற கணக்கிலும் சமநிலையில் முடிந்தது. ஒரு நாள் தொடரில் இரண்டாவது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் சண்டிமால், சகிப் அல்ஹசன் வீசிய 26 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது ஆப் திசையில் அடித்து விட்டு ஓடிய போது, இரண்டாவது ஓட்டத்திற்கு திரும்பியுள்ளார்.


Chandimal Run Out by aamadmi

அங்கு பீல்டிங் செய்த டஸ்கின் அகமத் உடனடியாக வங்கதேச விக்கெட் கீப்பர் ரகீம்மிடம் வீச, பந்தை பெற்ற ரகீம் உடனடியாக ஸ்டம்பில் அடித்து, நடுவரிடம் அவுட் கேட்கிறார்.

சண்டிமல் மற்றும் ரசிகர்கள் உட்பட அனைவரும் இது அவுட் இல்லை என்று தான் நினைத்திருந்தனர். ஆனால் டிவி ரீப்ளேயில் சண்டிமல் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

சண்டிமல் ரன் அவுட் ஆனதற்கு அவருடைய கவனக்குறைவு தான் காரணம் என்று பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments