கோஹ்லிக்கு ஓய்வு: ஷேன் வாட்சன் தலைமையில் களமிறங்கும் பெங்களூர்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபில் தொடரில் அவுஸ்திலேியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் தலைமையில் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித்தலைவரும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணித்தலைவருமான விராட் கோஹ்லிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், கோஹ்லி உடற் தகுதியில் தேர்ச்சிப் பெற்று பெங்களூரு அணிக்கு திரும்பும் வரை வாட்சன் அணித்தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 10ல் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் முதல் நான்கு போட்டிக்கு வாட்சன் அணித்தலைவராக செயல்படுவார் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments