அஸ்வினுக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரரை தூக்கிய டோனி அணி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் பண்முக ஆட்டக்காரரான அஸ்வின் இடத்தை நிரப்புவதற்கு மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை புனே அணி எடுத்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் 10 வது ஐபிஎல் தொடர் நேற்று கோலகலாமாக தொடங்கியது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதின.

இதில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில், புனே அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இப்போட்டி மஹாராஷ்டிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

புனே அணியில் நட்சத்திர வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான அஸ்வின் காயங்கள் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதனால் அவருக்கு இணையான ஒரு சுழற்பந்து வீச்சாளரை புனே அணி தேடிக்கொண்டிருந்தது.

தற்போது அதற்கு ஏற்றவகையில் தமிழகத்தைச் சேர்ந்த பண்முக ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தரை புனே அணி எடுத்துள்ளது.

17 வயதான வாசிங்டன் சுந்தர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக்கிண்ணம் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார்.

அஸ்வினைப் போன்றே சிறப்பாக பந்து வீசும் வாசிங்டன் சுந்தரின் பந்து வீச்சை மும்பை இந்தியன்ஸ் சமாளிக்குமா என்பது போட்டி முடிந்த பின்பு தான் தெரியும்.

இருப்பினும் அஸ்வின் சுந்தருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது புனே அணியின் தலைவர் ஸ்மித் கையில் தான் உள்ளது. புனே அணியில் தான் டோனி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments