காம்பீர் கையில் இருந்த வெற்றியை பறித்த பாண்ட்யா: கொல்கத்தாவை புரட்டி எடுத்த கடைசி 4 ஓவர்

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தா மற்றும் மும்மை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, பட்லர் மற்றும் பொல்லார்டு போன்றோர் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெறுவது உறுதியானது. ஆனால் அடுத்து வந்த பாண்ட்யாவும், களத்தில் இருந்த ராணாவும் கொல்கத்தா அணியின் கனவை கெடுத்தனர்.

கடைசி 22 பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 59 ஓட்டங்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற ராணாவும், பான்ட்யாவும் புரட்டி எடுத்தனர். ராணா அரைசதம் கடந்து 5 பவுண்டரி, மூன்று சிக்ஸர் விளாசினர்.

தன் பங்கிற்கு பாண்ட்யா 11 பந்தில் 29 ஓட்டங்கள் குவித்து 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக கொலகத்தா அணியின் தலைவர் காம்பீர் கையில் இருந்த வெற்றியை பாண்ட்யாவும், ராணவும் பறித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments