ஐபிஎல் போட்டியில் முதல் சதம்..9 பந்தில் 38 ஓட்டம்: வானவேடிக்கை காட்டிய மோரிஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 9 வது போட்டியில் டெல்லி அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ரகானே தலைமையிலான புனே அணியும், ஜாகீர்கான் தலைமையிலான டெல்லிடேர்டேவில்ஸ் அணிகளும் மோதின.

இப்போட்டியில் புனே அணி, டெல்லி அணி பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் புனே அணி 108 ஓட்டங்களுக்குள் சுருண்டு 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன் 102 ஓட்டங்கள் குவித்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். பத்தாவது ஐபிஎல் தொடரில் அடித்த முதல் சதமும் இதுவாகும்.

ஒரு கட்டத்தில் 160 ஓட்டங்களை டெல்லி அணி தாண்டுமாக என்று எண்ணிக்கொண்டிருந்த போது 6-வது வீரராக களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 9 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர் என மொத்தம் 38 ஓட்டங்கள் விளாச டெல்லி அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ஓட்டங்கள் எடுத்தது.

புனே அணிக்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சுமார் 16 இன்னிங்சுக்கு பின், தனது தாகத்தை தீர்த்துக்கொண்டார்.

இதற்கு முன் கடந்த 2016-ல் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments