அம்மாடியோவ் 4 பந்துக்கு 92 ஓட்டங்கள் அடித்து சாதனை: இப்படி ஒரு மோசமான பவுலரா?

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேசத்தில் நடந்த டாக்கா டிவிசன் செகண்ட் லீக் தொடரில் வங்கதேச பந்து வீச்சாளர் ஒருவர் 4 பந்துக்கு 92 ஓட்டங்கள் கொடுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் The Dhaka Second Division Cricket லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் Axiom அணியினரும் Lalmatia அணியினரும் மோதியுள்ளன.

இப்போட்டியில் முதலி துடுப்பெடுத்தாடிய Lalmatia அணி 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் 89 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் Axiom அணி சார்பில் துவக்க வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அதன் படி Lalmatia அணி சார்பில் முதல் ஒவரை Sujon Mahmud வீசியுள்ளார். இதில் 4 பந்துகள் வீசி 92 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, Axiom அணியை வெற்றி பெற வைத்தார்.

கிரிக்கெட் உலகின் மிக மோசமான பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய ஓவரில் 65 Wides மற்றும் 15 நோ பால் வீசியுள்ளார். அதன் பின்னர் நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு Canterbury-ல் நடந்த முதல் தர போட்டியில் ஒரு ஓவருக்கு 77 ஓட்டங்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ஓட்டமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments