அஸ்வின் இதை செய்தால் கண்டிப்பாக அசத்துவார்: அடித்து சொல்லும் முரளிதரன்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தன்னுடைய பந்து வீச்சில் கூடுதல் அக்கறை கொண்டு செயல்படுத்தி வந்தால், வெளிநாட்டு தொடர்களில் அசத்துவார் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் சுழல் ஜாம்பவனான முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஐபிஎல் அணியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சாளர் பயிற்சியாளராக உள்ளார்.

இந்நிலையில் இந்திய வீரர் அஸ்வின் குறித்து அவர் கூறுகையில், இந்திய மண்ணில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தி வருகிறார். அவருக்கு தன்னம்பிக்கை அதிகம், இந்திய அணி ஒரு தொடரில் வெற்றி பெற்றால் அதில் அஸ்வினின் பங்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுவே அவர் மேலும் தன்னுடைய பந்து வீச்சில் அக்கறை கொண்டு, தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தால் அவர் வெளிநாட்டு தொடர்களிலும் அசத்துவார். அஸ்வின் மட்டுமின்றி ரவிந்திரஜடேஜாவும் சிறந்த பந்து வீச்சாளர்.

இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments