விளாசி தள்ளிய காம்பீர்! கொல்கத்தாவிடம் சுருண்டது பஞ்சாப்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் டி20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்கள குவித்தது.

இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் சுனில் நரேன் 18 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரரும் அணித்தலைவருமான காம்பீர் இறுதி வரை ஆட்டமிழக்காமல்49 பந்துகளுக்கு 72 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க 16.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments