பந்தை பறக்க விட்ட ஆரோன்! நான்கு முறை தட்டித்தட்டி கேட்ச் பிடித்த காம்பிர்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர் ஒரு கேட்சை நான்கு முறை தட்டித்தட்டிப்பிடித்தது வைரலாகியுள்ளது.

கொல்கத்தாவில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று அசத்தியது.

ஆட்டத்தின் போது கொல்கத்தா வீரர் வோக்ஸ் வீசிய போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தை பஞ்சாப் வீரர் வருண் ஆரோன் தூக்கி அடித்தார்.

அதை கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் காம்பிர் கேட்ச் பிடிக்க முயன்ற போது பந்து அவரது கையில் இருந்து நழுவியது. ஆனால் சுதாரித்த காம்பிர், தட்டித்தட்டி நான்காவது முயற்சியில் பிடித்து அசத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments