மைதானத்தையே அதிர வைத்த சுனில் நரைன்: ஐபிஎல் அரங்கில் வரலாற்று சாதனை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

பெங்களூருவில் நடக்கும் 46வது லீக் போட்டியில், பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர், முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

கொல்கத்தா அணியில் கிறிஸ்லின் மீண்டும் அணிக்கு திரும்பினார். பெங்களூரு அணியில் வாட்சனுக்கு பதிலாக, டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, நட்சத்திர வீரர்கள் சொதப்ப, பெங்களூரு அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. ஹெர் (75), அரவிந்த் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு, சுனில் நரைன், லின் ஜோடி நம்பமுடியாத அதிரடி துவக்கம் அளித்தது. குறிப்பாக நரைன், பெங்களூரு பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

சிக்சர், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளிய நரைன், 15 பந்தில் அரைசதம் அடித்து ஐபிஎல் அரங்கில், அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார்.

17 பந்தில் 54 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்த நிலையில் நரைன் அவுட்டானார். இதனையடுத்து காம்பிர் மற்றும் கிராண்டோம் இணை விளையாடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் குவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments