பிரித்தானியா டி20 தொடரில் கலக்கபோகும் இலங்கை ஜாம்பவான் மஹேல ஜயவர்தன

Report Print Basu in கிரிக்கெட்

பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் நாட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் தொடரில் விளையாட லங்கஷைர் அணியானது இலங்கை ஜாம்பவான் மஹேல ஜயவர்தனவினை ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரித்தானியாவின் உள்ளுர் அணிகளுக்கு இடையே நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 தொடர் யூலை 7ம் திகதி முதல் செப்டம்பர் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் தொடரின் கடந்த பருவகாலத்தில் சோமர்செட் அணிக்காக மஹேல விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் உள்ளூர் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காகவும், நியூசிலாந்தின் உள்ளூர் தொடரில் சென்ட்ரல் ஸ்டேக் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

லங்கஷைர் அணிக்காக ஒப்பந்தமானது குறித்து 39 வயதான மஹேல ஜயவர்தன கூறியதாவது, லங்கஷைர் அணியில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இளம் வீரர்கள் கொண்ட லங்கஷைர் அணியில் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழச்சி அளிக்கிறது.

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நாட்வெஸ்ட் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன். இம்முறை லங்கஷைர் அணியின் வெற்றியின் மூலம் என் கனவு நிறைவேறும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments