சூப்பர மேனாக மாறி பஞ்சாப் அணியை காப்பாற்றிய அக்சார் படேல்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் அக்சார் படேலின் சிறப்பான களத்தடுப்பால் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

மெஹாலியில் நடந்த போட்டியில்14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழத்தி அசத்தியது பஞ்சாப் அணி .

இதற்கு முக்கிய காரணம் அக்சார் படேலின் சிறப்பான களத்தடுப்பாகும். 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நிலையில் கொல்கத்தா அணி சொற்ப ஓட்டங்களில் நரைன், கம்பீர் விக்கெட்டை இழந்து திணறியது.

உத்தப்பா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் Tewatia வீசிய பந்தை உத்தப்பா பறக்க விட ஓடி வந்த அக்சார் படேல் சூப்பர் மேனாக பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

இதனால், கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட உத்தப்பா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து சிறப்பாக விளையாடி வந்த லின், அக்சார் படேலின் மின்னல் வேக செயலால் ரன் அவுட் ஆகி 84 ஓட்டங்களில் வெளியேறினார்.

இரு முக்கிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அக்சார் படேலின் கேட்ச் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments