இலங்கை வீரரின் கை ஒரு அற்புதமான கை..ஆபத்தான வீரர்: புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா ஒரு அற்புதமான வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடித் தந்தவர் ஜெயசூர்யா. இவரின் அதிரடியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மும்பை அணி ஐபிஎல் தொடரில் இவரை முதல் ஆளாக ஏலத்திற்கு எடுத்தது.

அத்தொடரிலும் தன்னுடைய அதிரடிய விடவில்லை. வயது தான் ஆனதே தவிர அதிரடியே இருக்கிறது என்பதை நிரூபித்தார். அதன் பின் கிரிக்கெட் உலகிலிருந்து ஒய்வு பெற்றார்.

அதைத் தொடர்ந்து மும்பை அணி அண்மையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவித்தது.

அந்நிகழ்ச்சிக்கு மும்பை அணியின் முன்னாள் வீரராக ஜெயசூர்யா வந்திருந்தார். அது சிறப்பாக சென்றது.

அதன் பின் மும்பை அணி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் சச்சின் ஜெயசூர்யா ஒரு அற்புதமான வீரர், கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் கை ஒரு அற்புதமான கை என்றும் அவருடைய அடி ஒரு டென்னிஸ் ராக்கெட் ஷாட் போன்று இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின்சிங் கூறுகையில், அவர் எப்போதுமே ஒரு ஆபத்தான வீரர், அது எனக்கு தெரியும், அவருடன் நான் நிறைய போட்டிகள் விளையாடி உள்ளேன். அவர் மீது ஒரு வித பயம் இருந்து கொண்டு தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments