சாதிக்க சாம்பியன் தொடரில் அணிக்கு திரும்பும் இலங்கை வீரர்: தாக்கத்தை ஏற்படுத்துவரா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று இலங்கை அணிக்கு திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தங்கள் நாட்டு அணியின் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை அணிக்கு வலு சேர்க்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இலங்கை அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2015 நவம்பருக்கு பிறகு தற்போது ஒரு நாள் தொடருக்கு திரும்பியுள்ளேன். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்கிலாந்தில் இத்தொடர் நடப்பதால், மிகவும் சிறப்பானதாக அமையும். எங்கள் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகள் உள்ளன.

அதனால் போட்டிகள் கடுமையாக இருக்கும். இருந்த போதிலும் தங்கள் அணியிலும் சிறப்பான வீரர்கள் இருப்பதால், சாம்பியன் டிராபி தொடரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் 2015-ஆம் ஆண்டு நவம்பருக்கு பின் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு திரும்பும் மலிங்கா, சாம்பியன் டிராபி தொடரில் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments