மைதானத்துக்குள் புகுந்து ரெய்னா முன் மண்டியிட்ட பாசக்கார ரசிகரால் பரபரப்பு

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி ,குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர் ஒருவர் அதிரடியாக மைதானத்திற்குள் புகுந்த ரெய்னாவிடம் ஆட்டோகிராப் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கான்பூரில் நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 195 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் டெல்லி அணி துடுப்பாட குஜராத் அணி பந்து வீசியது .

சுரேஷ் ரெய்னா களத்தடுப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். நான்காவது ஓவரின் மூன்றாவது பந்தை சங்வான் வீச ஆயத்தமானார்.

அப்போது பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் புகுந்த பாசக்கார ரசிகர் ஒருவர், ரெய்னா முன் மண்டியிட்டு அவர் கையை பிடித்துக் குலுக்கினார். பின்னர் ,ஒரு பேப்பரில் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார்.

இதை எதிர்பார்க்காத ரெய்னா, அந்த ரசிகரை, இது முறையல்ல, இப்படி வருவது தவறு என்று கூறி, மைதானத்துக்கு வெளியே போகச் சொன்னார். நடுவரும் சேர்ந்து அந்த ரசிகரை வெளியே கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments