சாம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி வெல்ல என் பங்களிப்பு இருக்கும்: யுவராஜ் சிங்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நோக்கம் நிறைவேற பயனுள்ள பங்களிப்பை அளிப்பேன் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூம் மாதம் 1ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.

கடந்த 2002, 2004, 2006 சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்று விளையாடிய யுவராஜ் சிங் அதற்கு பிறகான போட்டிகளில் விளையாடவில்லை.

11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சாம்பியன்ஸ் தொடரில் விளையாட உள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த யுவராஜ் சிங், சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணி உள்ளூர் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று நல்ல பார்மில் இருப்பதாக கூறிய அவர் அதே உத்வேகத்துடன் சாம்பியன்ஸ் போட்டியிலும் செயல்படும் என கூறியுள்ளார்.

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் நோக்கம் நிறைவேற தனது பங்களிப்பை அளிப்பேன் எனவும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments