குறி பார்த்து அடித்த ரெய்னா: பரிதாபமாக வெளியேறிய பண்ட்

Report Print Basu in கிரிக்கெட்

குஜராத் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டெல்லி வீரர் ரிஷப் பண்ட் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 10 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார்.

அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பண்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து மிரட்டல் துவக்கம் கொடுத்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தை அடிக்க முயன்ற போது பந்து கால் பகுதியில் பட்டு பின்புறமாக சென்றது.

பந்துவீச்சாளர் LBW என விக்கெட் கேட்டு நடுவரிடம் முறையிட பண்ட் கேட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தார். பின்னால் இருந்த பந்தை பிடித்த ரெய்னா குறிபார்த்து ஸ்டம்பை நோக்கி வீசினார்.

பந்த் ஸ்டம்பில் பட பண்ட் பரிதாபமாக அவுட் ஆகி வெளியேறினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments