மொத்த துடுப்பாட்ட வீரர்கள் கைவிட்டாலும்: மும்பை அணியை மீட்ட பாண்ட்யா

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மற்றோரு வீரர் கருணல் பாண்ட்யா.

இப்போட்டியில் மும்பை அணியின் துடுப்பாட்டம் சொதப்பலாக இருந்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் புனே அணி இந்த எளிய இலக்கை எட்டி விடும் என்று எதிர்பார்த்த போது, மும்பை அணிக்கு அந்த இலக்கே வெற்றிக்கு காரணமாக இருந்தது.

ஆட்டத்தின் முதல் பந்து முதலே ஒரு விதபதற்றத்தோடு ஆடி வந்தது மும்பை. பார்த்திவ் பட்டேலை 3-வது ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார் உனட்கட்.

அதே ஓவரில் சிம்மன்சை ஒரு கையால் கேட்ச் பிடித்து அவரையும் வெளியேற்றினார்.

அம்படடி ராயுடு சிறப்பாக துடுப்பாட்டத்தை தொடங்கிய நிலையில் புனே அணியின் தலைவர் ஸ்மித் அவரை ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.

இப்படி ஒருபக்கம் மும்பை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சரிவடைந்த நிலையில், தலைவர் ரோகித் ஷர்மாவும் பதற்றத்தோடு ஆடி வந்தார். ஒரு கட்டத்தில் அவரும் பவுண்டரி லைனில் சிறப்பான ஒரு கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார்.

பொல்லார்ட் அதிரடி காட்ட தொடங்கிய நேரத்தில் 7 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பொல்லார்ட்டை தான் மும்பை அணி பெரிதாக நம்பியிருந்தது, ஆனால் அவரும் சொதப்பியதால், 100-ஓட்டங்களைக் கூட தாண்டுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கொல்லாம் நிவாரணமாக இருந்தது, இடது கை மட்டையாளர் கருணால் பாண்ட்யாதான்.

இவர் ஒருமுனையில் நின்று, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்தும் ஆடினார்.

47 ஓட்டங்களை குவித்த இவர் தன்னம்பிக்கையோடு அந்த ஓட்டங்களை அடித்திராவிட்டால், மும்பை இன்னும் மோசமாக சுருண்டிருக்கும்.

கருணால் பாண்ட்யாவின் அந்த எண்ணிக்கை தான் மும்பை அணி 1-ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments