மும்பை த்ரில் வெற்றி: நிர்வாணமாக நடனமாடி வெளியிட்ட பிரபல இங்கிலாந்து வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றிப்பெற்றதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நிர்வாணமாக நடனமாடி வெளியிட்டுள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.

ஐபிஎல் 10 தொடரில் மும்பை அணியில் விளையாடி வந்த ஜோஸ் பட்லர், எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ணத்தொடர் பயிற்சிக்காக நாடு திரும்பினார். இதனால், இறுதிப்போட்டியில் பட்லரால் விளையாட முடியாமல் போனது.

எனினும், நாடு திரும்பிய அவர் தனது அணி விளையாடும் இறுதிப்போட்டியை ஆவலுடன் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கடைசி பந்தில் மும்பை வெற்றிப்பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த பட்லர் தான் அணிதிருந்த துண்டை கழற்றி நிர்வாணமாக நடனமாடி கொண்டாடினார்.

இதை வீடியோவாக பதிவு செய்த பட்லர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, குறித்த வீடியோ இணயைத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments