மேத்யூஸ் அதிரடி வீண்... கடைசி ஓவரில் இலங்கை ஊதி தள்ளியது அவுஸ்திரேலியா

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா தோற்கடித்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் டேவிட் வார்னர் பந்து வீச முடிவெடுத்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் மேத்யூஸ் 95 ஓட்டங்கள் குவித்தார், அவுஸ்திரேலிய தரப்பில் மோசேஸ் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

319 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திலேிய அணி 49.4 ஓவரில் 8 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் இறுதி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிப்பெற்றது அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா தரப்பில் அரோன் பின்ச் 137 ஓட்டங்கள் விளாசினார். இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments