சாம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா

Report Print Raju Raju in கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கிண்ணம் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் வரும் 1ஆம் திகதி சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் தொடங்கவுள்ளது. தற்போது இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து 38.4 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 26 ஓவர்களில் 129 ஓட்டங்களை குவித்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி சார்பில் அதன் தலைவர் வீராட் கோஹ்லி 52 ஓட்டங்களும், டோனி 17 ஓட்டங்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments