அஸ்வின் புரிந்து கொள்வார்: கோஹ்லி ஓபன் டாக்

Report Print Santhan in கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் ஆடும்லெவனில் இடம்பெறாதது குறித்த காரணத்தை அஸ்வின் புரிந்துகொள்வார் என்று இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் அஸ்வின் இடம் பெறாதது குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப ஆடும் லெவனைத் தேர்வு செய்வது அவசியம்.

அஸ்வின் மிகச்சிறந்த வீரர். அணியின் நன்மை கருதி எந்த முடிவையும் அவர் ஏற்றுக்கொள்வார். பீல்டிங் வியூகம் வகுப்பது உள்ளிட்ட விவகாரங்களில்தான் எனக்கும், அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

ஆனால், வீரர்கள் தேர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்லை என்றும் கோஹ்லி தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விராத் கோஹ்லி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments