சாம்பியன்ஸ் டிராபி: தொடரிலிருந்து வெளியேறுமா அவுஸ்திரேலியா?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இதில் அவுஸ்திரேலியா இன்று கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது,

ஏற்கனவே வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோதிய அவுஸ்திரேலியா வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

ஆனால் இங்கிலாந்து வங்கதேசம், நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் கால்பதித்துள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் அவுஸ்திரேலியா தொடரில் நீடிக்கும், இல்லையென்றால் தொடரை விட்டு வெளியேறும் சூழல் உருவாகும்.

இதற்கிடையே இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments