பாகிஸ்தான் அணி வீரரிடம் டோனி சாயல் இருக்கிறதாம்: யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்ப்ராஸ் அகமதிடம், டோனியின் சாயல் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அகமது முக்கியமான ஆட்டத்தின்(இலங்கை) போது சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்தார்.

அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது தன்னுடைய சிறப்பான வியூகங்கள் மூலம் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணற வைத்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், இந்திய அணி வீரரான டோனியுடன், சர்ப்ராஸ் அகமதை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், இத்தொடரில் சர்ப்ராஸ் அகமத் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியாக அமைந்தன.

அவர் போட்டியின் போது இந்திய அணி வீரரான டோனி போல் திட்டங்களை எளிமையாக வைத்துக் கொள்கிறார்.

ஆனால் உணர்வு அளவில் இருவரும் வேறுபட்டவர்கள், இவரின் திட்டங்கள் அணி வீரர்களுக்கு எளிதாக புரிந்துவிடுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் தலைமையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. தன்னுடைய உணர்வுகளை எப்படி சொல்வது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments