இந்தியா-பாகிஸ்தான் போட்டி: பவுண்டரி,சிக்ஸர்களுக்கு பாதி விலையில் சிக்கன்

Report Print Santhan in கிரிக்கெட்

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுக்கு பாதி விலையில் உணவு வழங்குவதற்கு ஹொட்டல்கள் முடிவு செய்துள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அங்குள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை காண்பதற்கு முன்னணி வீரர்கள் உட்பட பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போட்டியின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால், டெல்லியில் உள்ள ஹொட்டல்கள் சில சலுகைகள் வழங்கியுள்ளன.

அதில் ராஜேந்திர பேலஸ் என்ற ஹொட்டல் நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் விழும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் 5 முதல் 20 சதவீதம் வரை உணவில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் இந்திய அணி அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுக்கு சைவம், அசைவம் என இரண்டிலும் பாதி விலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதே போல் டெல்லியில் உள்ள பல ஹொட்டல்களில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் மோதும் போட்டியில் இந்தியா வெல்வதை தவிர வேறு எதுவும் தங்களுக்கு தேவையில்லை என ஹொட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments