டோனியிடம் இத்தனை மோட்டார் சைக்கிள்கள் உள்ளதா? ஜடேஜா சொன்ன ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்
666Shares
666Shares
lankasrimarket.com

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா மோட்டார் சைக்கிள் பயணம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது மோட்டார் சைக்கிள் பயணம் குறித்து கூறுகையில், மோட்டார் சைக்கிள் பயணம் தனக்கும் எப்போதும் பயத்தை ஏற்படுத்தும் என்றும், தன்னிடம் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் இருக்கிறது.

ஆனால் இதுவரை நான் அதை ஓட்டியது இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் டோனி பற்றி கூறுகையில், டோனியிடம் நான் ஒரு முறை உங்களிடம் எத்தனை மோட்டார் சைக்கிள்கள் இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் பதில் கூற திணறினார்.

அதன் பின் 43 முதல் 44 வரை இருக்கும் என்று கூறினார். டோனி தனக்கு மோட்டார் சைக்கிள்களை எப்படி கையாள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் என்றும் ஜடேஜா கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments