இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தமிழக அணியில் விளையாடியவர் தெரிவு

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பிற்கான பயிற்சியாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

துடுப்பாட்ட பயிற்சியாளராக சஞ்சாய் பங்கர், களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் பரிந்துரையின் பெயரில் பரத் அருண் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் பிறந்த பரத் அருண், ரஞ்சி கிண்ண தொடரில் தமிழக அணியில் விளையாடியவர். 1987-88 ரஞ்சி கிண்ணத்தை வென்ற தமிழக அணியில் பரத் அருண் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முவரும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments