இலங்கை நட்சத்திர வீரர் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமந்த எரங்க மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 31ம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சமந்த எரங்க பந்து வீச்சு பாணி முறையற்றது என சந்தேகம் எழுந்தது

அதனைத் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரது பந்துவீச்சுப்பாணி விதிமுறைகளுக்கு புறம்பானது என நிரூபணமானது.

இதனையடுத்து, சமிந்த எரங்க தனது பந்துவீச்சுப்பாணியை மாற்றியமைத்துக் கொண்ட பின்னர், பந்து வீச்சு பாணி தொடர்பான சிறப்பு பரிசோதனைகள் ஐசிசியால்சென்னையில் நடாத்தப்பட்டது.

அதன் முடிவுகளின்படி எரங்கவின் அனைத்து பந்துவீச்சுக்களிலிலும் முழங்கையின் விரிவானது 15 பாகைக்கு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமிந்த எரங்கவிற்கு மீண்டும் பந்து வீசு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும் , அவரின் பந்து வீச்சு பாணியில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிப்பதற்கு நடுவர்களுக்கு முடியும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , சமிந்த எரங்கவின் பந்து வீச்சு காணொளி மற்றும புகைப்படங்களும் நடுவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments