தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு தமிழச்சி!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழச்சி ஒருவர் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி விக்கெட் கீப்பராக அசத்தி வருகிறார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்து வளர்ந்த த்ரிஷா ஷெட்டியின் பூர்வீகம் தமிழகத்தின் சென்னை என கூறப்படுகிறது.

இன்னமும் த்ரிஷாவின் உறவினர்கள் சென்னையில் வசித்து வருவதாக கூறும் அவர், இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவோடு விளையாடினால் தனது ஆதரவு எப்போதும் தென்னாப்பிரிக்காவுக்கே என தெரிவித்துள்ளார்.

7 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய த்ரிஷா தனது 18-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திரமாக உருவாகியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்சை ரோல் மொடலாக கொண்டுள்ள த்ரிஷா அவர் போலவே தன்னையும் வளர்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக, 3 மாதம் இடை நீக்கம் செய்திருந்த தென்னாப்பிரிக்க அணி, மீண்டும் அணிக்கு திரும்பியதும் த்ரிஷாவை துவக்க வீரராக களமிறக்கி இருக்கிறது. அதற்கு முன்புவரை ஏழாவது இடத்தில்தான் இறங்குவாராம்.

உலகின் சிறந்த விக்கெட் கீப்பராக வேண்டும் என ஆசைப்படும் த்ரிஷா, எவரும் இதுவரை செய்திராத சாதனையை செய்ய வேண்டும் எனவும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments