இலங்கை அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் அறிவிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முத்தரப்பு தொடர்களில் விளையாட உள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் Hashan Tillakaratne தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு மட்டும் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் மேலாளர் கூறுகையில், Hashan Tillakaratne-வின் அனுபவம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அதுமட்டுமின்றி போட்டியின் போது எப்படி சமாளிப்பது அதாவது அழுத்தங்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் எப்படி துடுப்பெடுத்தாடுவது என்பதை அவரிடம் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான Hashan Tillakaratne 83 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். 2003-2004 ஆண்டுகளில் இலங்கை அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த வாரம் தான் இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமீந்தா வாஸ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers