இலங்கைக்கு எதிராக அஸ்வின் விளையாடும் 50வது டெஸ்ட் போட்டி: இலக்கு என்ன?

Report Print Raju Raju in கிரிக்கெட்

வருங்காலங்களில் விளையாடும் போட்டிகளில் இலக்கு நிர்ணயித்து செயல்பட மாட்டேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 275 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நாளை இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் அஷ்வின் களம் கண்டால் அது அவருக்கு 50-வது டெஸ்ட் போட்டியாகும். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த காலங்களில் நான் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு இருக்கிறேன்.

அதில் இருந்து நிறைய பாடங்கள் கற்று இருப்பதால் வருங்காலங்களில் புதிதாக இலக்கு நிர்ணயித்து செயல்படமாட்டேன் என கூறியுள்ளார்.

50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறப்பானது தான். இன்னும் எத்தனை போட்டிகளில் விளையாடுவோம் என்பது நமக்கு தெரியாது.

காலே மைதானம் தனக்கு மறக்க முடியாத இடம் என கூறிய அஷ்வின், 2015-ல் அங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது தன் மனதில் நிலைத்து நிற்பதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers