இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இவர் இருந்தால் பலத்தை கொடுக்கும் என கோஹ்லி சூசகம்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஹார்திக் பாண்ட்யா அணியில் இடம் பிடித்தால் எங்களுக்கு பலத்தை கொடுக்கும் என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான விராட்கோஹ்லி, முதல் டெஸ்ட் போட்டியில் ஆல்-ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் அணியில் இடம் பிடித்தால் பலத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இது போன்று கூடுதல் துடுப்பாட்ட வீரர் அணியில் சேர்க்கப்படும் போது, எங்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்துள்ளது. அதனால் இதை நாங்கள் கண்டிப்பாக காலே டெஸ்டில் செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers